Sat. Dec 20th, 2025

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மர்மமாக செயல்பட்டு வந்த கஞ்சா விற்பனை கும்பல்களுக்கு எதிராக இன்று டிஎஸ்பி தனஜெயன் அவர்களின் திடீர் உத்தரவின் பேரில் காவல்துறை அதிரடி வேட்டை நடத்தியது.

👮👮👮👮👮பழனி காவல்துறையின் மாஸ் ஆபரேஷன்:

ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி உத்தரவின்படி
பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் மேற்பார்வையில்,
சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

முதல் கும்பல் – 100 கிராம் கஞ்சா பறிமுதல்.

சிவகிரி பட்டி அருகே தண்ணீர் தொட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான இளைஞர்கள் காவல்துறையை கண்டு தப்பியோட முயன்றனர்.

விரைவான நடவடிக்கையில் 5 பேரை மடக்கிப் பிடித்து 100 கிராம் கஞ்சா பறிமுதல்.

இரண்டாவது கும்பல் – 150 கிராம் கஞ்சா பறிமுதல்

பழனி ஆண்டவர் கல்லூரி அருகில் பேருந்து நிறுத்தத்தில் மறைந்து நின்ற கும்பலை காவல்துறையினர் சூழ்ந்து பிடித்தனர்.

சோதனையில் 150 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மொத்தம் பறிமுதல்:

கஞ்சா – 250 கிராம்

இருசக்கர வாகனங்கள் – 5


🚨கைது செய்யப்பட்ட 15 பேர் பட்டியல்:🚨

1. பிரஜீத் – பாட்டாளித் தெரு, பழனி


2. அமுதநிலவன் – ராசாபுரம்


3. ராமச்சந்திரன் – பாட்டாளித் தெரு


4. அஜித் குமார் – குறும்பப்பட்டி


5. மணிவேல் – மதனபுரம்


6. வடிவேல் – பாலசமுத்திரம்


7. மாரிமுத்து – பெத்தநாயக்கன்பட்டி


8. பெரியசாமி – அர்ஜுனன் தெரு


9. ராஜா – தெற்கு அண்ணா நகர்


10. கார்த்திகேயன் – தம்பிரான் கோவில் தெரு


11. ராமச்சந்திரன் – பாட்டாளி கிழக்கு தெரு


12. சரவணன் – கருப்பண கவுண்டன் வலசு


13. மணிகண்டன் – அடிவாரம் கோனார் தெரு


14. ராமச்சந்திரன் – இந்திரா நகர்


15. (மொத்தம் இரண்டு கும்பலாக 15 பேர்)

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொதுமக்கள் பாராட்டு:

காவல்துறையின் தீவிர நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பும் நிம்மதியும் தெரிவித்துள்ளனர்.

நத்தம் தினேஷ்
மாவட்ட தலைமை நிருபர், திண்டுக்கல்

By TN NEWS