Sat. Dec 20th, 2025

விழுப்புரம்:
புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் வெளியூர் பயணிகளிடம் பணம் பிடுங்குதல் மற்றும் தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (24.11.2025) விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன், IPS அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளமுருகன் அவர்களின் தலைமையில், தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில்,

இரவு நேரங்களில் சுற்றித்திரிதல்,

வெளியூர் பயணிகளிடம் பணம் பிடுங்குதல்,

அச்சுறுத்தும் விதமான செயல்களில் ஈடுபடுதல்

போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன், திருநங்கைகள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிறு தொழில்கள் செய்ய அரசு வழங்கும் கடன் உதவிகள், நலத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கமும் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு கருத்துக்களை கேட்ட பின்னர், பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் தேவையில்லாத செயல்களில் ஈடுபடமாட்டோம் என திருநங்கைகள் உறுதி அளித்தனர்.

இக்கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செல்வநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி, தமிழ்நாடு டுடே

By TN NEWS