Sat. Dec 20th, 2025

பெரும்பாவூர் வட்டக்காட்டுப்படி:

மரபை மீறும் மனிதநேயத்தின் உயிர் காட்சி…..?

கேரள மாநிலம் பெரும்பாவூர் அருகிலுள்ள வட்டக்காட்டுப்படி ஜும்மா மசூதி மதரஸா முன்பு நேற்று(24-11-2025) இடம்பெற்ற ஒரு சம்பவம், சமூக ஊடகங்களில் மனிதநேயத்திற்கான சிறந்த உதாரணமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது. சாதாரண அன்றாட நிகழ்வாக தோன்றும் இந்த காட்சி, மதம்–இனம்–ஆடை என்ற எல்லா பிரிவுகளையும் தாண்டி மனிதர்கள் எப்படி ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும் என்பதை உயிரோடு சொல்லிக் காட்டுகிறது.

🕉️☪️தந்தை–மகன் பாசத்துக்கு உதவியாக நண்பன்:☪️🕉️

அந்தப் பகுதியில் வசிக்கும் ஹிஜாஸ், தனது மகனை மதரஸாவிலிருந்து அழைத்து வர வேண்டிய நேரத்தில், திடீர் வேலை காரணமாக அங்கு உடனடியாக செல்ல முடியாத சூழலில் இருந்தார். குழந்தை தனியாக காத்திருக்க வேண்டாம் என்பதையும், தந்தை ஆகும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய அவசியத்தையும் மனதில் கொண்டு, ஹிஜாஸ் தனது நெருங்கிய நண்பர் பினோய் என்பவரிடம் உதவி கேட்டார்.

நண்பனின் தேவையை உணர்ந்த பினோய், எந்தவித தயக்கமும் இன்றி தனது பைக்கை ஸ்டார்ட் செய்து நேராக மதரஸாவை நோக்கி புறப்பட்டு, ஹிஜாஸின் மகனை பாதுகாப்பாக அழைத்து வந்தார். இச்சுலபமான உதவி பெரிய செய்தியாக மாறியது.

🕉️🕉️🕉️🕉️அணி, ஆடை, அடையாளம்—எல்லாம் ஒதுங்கிய தருணம்:☪️☪️☪️☪️

இந்த காட்சியில் அனைவரையும் கவர்ந்த முக்கிய அம்சம்—
அணியும் ஆடையின் நிறம், மதத்தின் அடையாளம், சமூகவெளியின் வேறுபாடுகள்… இவை அனைத்தும் அந்த ஒரு கணத்தில் முக்கியமல்ல.

🔷🔷🔷முக்கியமானது மனிதநேயம்.
♦️♦️♦️ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு.
💥💥💥ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்காக செய்த சிறிய உதவி.

இந்த சம்பவத்தை பார்த்த பலரும்,
“சமூகத்தில் நாம் எதை வேண்டுமானாலும் மாற்றலாம்… ஆனால் மனிதர்கள் ஒருவர்மீது கொண்ட அன்பும் நம்பிக்கையும் மட்டுமே உண்மையான பாலம்”
என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

🌐🌐🌐சமூக ஒற்றுமைக்கு அழகான சின்னம்:🌐🌐🌐

கேரளா மாநிலம் சமூக ஒற்றுமை, சகிப்புத்தன்மை, மத நல்லிணக்கத்தின் வரலாற்று பாரம்பரியத்தால் எப்போதும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்தப் பண்பை நினைவூட்டும் விதமாகவே இந்த காட்சி மக்கள் மனதில் பதிந்திருக்கிறது.

🩸🩸ஆடை என்பது ஒரு அடையாளம் மட்டுமே;🩸🩸
🌹🌹அன்பு என்பது மனிதரின் உண்மை மொழி.🌹🌹

🏵️சிறிய செயலால் பெரிய செய்தி:🏵️

குழந்தையின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, தந்தை ஹிஜாஸ் உணர்ந்த நன்றி, நண்பர் பினோயின் மனதின் நெகிழ்ச்சி—
இந்த மூன்றும் சேர்ந்து நேற்று ஒரே ஒரு செய்தியை உலகுக்குக் கொடுத்தன:

📍“அன்பை விதைத்தால்… அன்பே அறுவடையாகும்”📍📍

🔏Shaikh Mohideen

 

 

By TN NEWS