Fri. Nov 21st, 2025


👑  இந்தியாவில் முதன்முறையாக SIR செயல்முறைக்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு; அப்பாஸ் முயற்சிக்கு பாராட்டுகள் ..!

சென்னை — தண்டையார்பேட்டை, ஆர்கே நகர் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் அப்பாஸ் உருவாக்கிய புதிய AI செயலி, பொதுமக்கள் எதிர்கொள்ளும் SIR படிவப் பிரச்சனைகளுக்கு தீர்வாக உருவெடுத்துள்ளது. பயனரிடமிருந்து பெயரை மட்டும் பெறுவதன் மூலம், 2002 மற்றும் 2005 SIR தரவைக் கொண்டு, தேவையான படிவங்களை தானாக நிரப்பி தரும் திறன் இந்த செயலிக்கு உள்ளது.

தற்போது எவ்வாறு பெயர் சொல்லப்பட்டாலும் — தமிழ் அல்லது ஆங்கிலம் — ஸ்பெல்லிங் துல்லியமாக இருக்காமல் இருந்தாலும் கூட, பயனரின் பழைய வாக்காளர் விவரங்களை AI தானாக கண்டறிந்து படிவத்தை பூர்த்தி செய்து தருகிறது. எந்தப் பகுதி? எந்தப் பூத்? 2002–2005 SIR-ல் பெயர் எப்படி இருந்தது? என்ற கவலைகள் யாவும் தேவையில்லை என்று அப்பாஸ் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் பிரச்சனைகளுக்கே உருவான தீர்வு

பெரும்பாலான குடிமக்கள் SIR படிவங்களை பூர்த்தி செய்யும்போது,

பழைய வாக்காளர் விவரங்கள் இல்லை,

சரியான எழுத்துப்பிழை தெரியாது,

முன்னாள் வாக்குச்சாவடி எது என்பது நினைவில் இல்லை,

எந்த SIR வருடத்தில் பெயர் உள்ளதோ தெரியாது,


என பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். இத்தகைய துயரங்களைச் சீர்செய்ய, இந்த AI செயலி பெரிய உதவியாக இருக்கும் என உள்ளூர் மக்கள் பாராட்டுகின்றனர்.

🔷 தொழில்நுட்பத்தின் புதிய முகம்:

இந்த முயற்சி இந்தியாவில் SIR செயல்முறைக்கு AI நேரடியாகப் பயன்படுத்தப்பட்ட முதல் முயற்சி என்ற வகையில் கவனம் பெறுகிறது. சமூக ஊடகங்களில் அப்பாஸுக்கு பாராட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. எளிமையான பயனர் அனுபவம், குறைந்த தரவு தேவைகள், பொதுமக்களுக்கு நேரடி தீர்வு ஆகியவை இதில் சிறப்பு அம்சங்களாகக் கூறப்படுகின்றன.

📢 “பெயரைச் சொல்லுங்கள்… AI வேலை செய்வது!”  அப்பாஸ்.

“பயனரிடம் எந்த சிரமமும் வேண்டாம். தற்போது உங்கள் பெயரை மட்டும் சொல்லுங்கள்; அது தமிழ் அல்லது ஆங்கிலம் என எதுவாக இருந்தாலும் AI சிஸ்டம் உங்களின் பழைய SIR ரெக்கார்டுகளைத் தொடர்ச்சி பார்க்கும். மக்கள் தினமும் சந்திக்கும் நிர்வாக சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே இந்த முயற்சியின் நோக்கம்,” என அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

♦️புகைப்பட விளக்கத்துடன் செயல்முறை வெளியீடு:

இந்த AI எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கும் டெமோ படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவை பொதுமக்களிடையே வேகமாகப் பரவி வருவதால், இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மேலும் பலருக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூகப் பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த தொழில்நுட்ப முயற்சியை எடுத்துக்கொண்ட அப்பாஸுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் சார்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


ஷேக் முகைதீன் – இணை ஆசிரியர்.

 

By TN NEWS