Thu. Nov 20th, 2025



நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ள ஒரு முக்கிய அரசியல், அரசியலமைப்புச் சம்பவத்தில், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கும் செயல்முறை குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், அரசியலமைப்பின் 143வது பிரிவு படி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

➤ ஆளுநரின் அதிகாரம் முழுவதும் அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டது:

தீர்ப்பில், ஆளுநரின் அதிகார வரம்புகள் குறித்து உச்சநீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

🔷 முக்கியமாக, நீதிமன்றம் கூறியது:

“மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு நேரக்கெடு நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது.”

“ஆளுநர் மசோதாவை ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், காரணத்துடன் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.”

➤ “ஆளுநரின் செயல்முறை கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஒத்துப்போக வேண்டும்”

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், ஆளுநர்கள் தங்களின் பதவியை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட கட்டுப்பட்ட அதிகாரங்களின் வரம்பிற்குள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

🛑தீர்ப்பின் முக்கியக் கருத்துக்கள்:🛑

“ஆளுநர் காரணமின்றி நீண்டகாலம் மசோதாவை பதுக்கி வைத்து விடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.”

“மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் ஆளுநர் செயல்பட வேண்டியது கட்டாயமானது.”

“ஒரே மாநிலத்தில் சட்டப்படி இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவது ஏற்கக்கூடியது அல்ல.”


இந்த கருத்து, அரசியலமைப்பின் ஆன்மாவையும் கூட்டாட்சி நிர்வாகக் கோட்பாட்டையும் உறுதியாக பாதுகாக்கும் விதமாகும்.

➤ ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட தீர்மான அதிகாரங்கள் – மூன்று மட்டுமே!

உச்சநீதிமன்றம் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பத் தீர்மானத்தைப் பயன்படுத்தக்கூடிய பகுதிகளில் தெளிவுபடுத்தியது:

1. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குதல்


2. மசோதாவை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்புதல்


3. மசோதாவை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புதல்

அதற்கு அப்பாற்பட்ட எந்தவொரு செயலிலும், ஆளுநர் மாநில அமைச்சரவையின் ஆலோசனையை பின்பற்றவேண்டிய கடமையிலிருந்து விலக முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


➤ காரணமின்றி மசோதாக்களை நிலுவையில் வைத்தால் என்ன செய்யலாம்?

உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது:

“ஒரு மசோதா மீது ஆளுநர் காரணமின்றி நீண்ட காலம் முடிவெடுக்காமல் இருப்பின், சம்பந்தப்பட்ட மாநில அரசு நீதிமன்றத்தை நாடலாம்.”


இது, ஆளுநர்களின் பதவி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் பெரிய அரசியலமைப்புச் பாதுகாப்பு எனக் கருதப்படுகிறது.

➤ தீர்ப்பின் தாக்கம் — மத்திய–மாநில உறவுகளில் தெளிவு:

இந்த தீர்ப்பு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான சாசன தகராறுகளில் எதிர்காலத்தில் முக்கிய வழிகாட்டுதலாக இருக்கும். குறிப்பாக, சில மாநிலங்களில் ஆளுநர்–அரசு மோதல்கள் அதிகரித்துள்ள சூழலில், இந்த தீர்ப்பு ஒரு சட்டப்பூர்வ சமநிலையை உருவாக்கும் வரலாற்று தீர்ப்பு என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.


ஷேக் முகைதீன் – இணை ஆசிரியர்.

By TN NEWS