Thu. Aug 21st, 2025



குடியாத்தம், ஜூலை 22:
குடியாத்தம் நகரம் நெல்லூர் பேட்டை தேரடியில் உள்ள 26, 27, 28-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நியாய விலை கடை, இரண்டு மாதங்களுக்கு முன்பு சந்தப்பேட்டை மாட்டுச்சந்தை மைதானத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த மாற்றத்தினால் பயனாளிகளில் சுமார் 70% மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது குறித்து பொதுமக்கள் கவலை வெளியிட்ட நிலையில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், நகர கழக செயலாளர் J.K.N. பழனி தலைமையில் பல்வேறு அளவிலான போராட்டங்கள், மனுக்கள் மற்றும் மக்கள் ஒப்பந்தங்கள் நடத்தப்பட்டன.

இதன் விளைவாக, மீண்டும் பழைய இடமான தேரடியில் நியாய விலை கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் நிவாரணம் பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சேவல் E. நித்யானந்தம் (Ex. மன்ற உறுப்பினர்) மற்றும் 27-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் A. சிட்டிபாபு ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி வெளியிட்டனர்.

இந்நிகழ்வில் Y. வாசுதேவன், S. நேரு, G. விஜயகுமார், G. தீனதயாளன், S. குமார் (குடியாத்தம்) உள்ளிட்ட பலர் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

– குடியாத்தம் செய்தியாளர் K.V. ராஜேந்திரன்

By TN NEWS