Mon. Mar 2nd, 2026

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு பணியாற்றும் காவல்துறை பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்பட்டதாகவும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Dr. A. பிரதீப், I.P.S., திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகள் அணுகல் வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் அனைத்தும் சரிவர உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, அவசரநிலை கையாளுதல் மற்றும் பொதுமக்களுடன் ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தூண்டும் வகையிலான கருத்துகள் பதிவிடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு, தேர்தல் செயல்முறைக்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம்
ராமர், செய்தியாளர்

By TN NEWS