📍 நாகர்கோவில் – டதி பள்ளி சந்திப்பு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரில் டதி பள்ளி அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலை முன்பு பாரதப் பிரதமரின் திருவுருவ பொம்மையை வேப்பமரத்தில் கட்டி இழிவுபடுத்தியதாகக் கூறி எதிர்ப்பு எழுந்தது.
இந்தச் சம்பவத்துக்கு எதிராக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி டதி ஸ்கூல் சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
👥 போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்:
மாமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரோஷிஸ்டா திருமால்
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நாகராஜன்
அகில இந்திய செயற்குழு உறுப்பினர் உமாரதி ராஜன்
விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகரத் தலைவர் நாஞ்சில் ராஜா
மேலும் பல நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள்
போராட்டக்காரர்கள், “பாரதப் பிரதமரின் திருவுருவப்படத்தை மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு அவமானப்படுத்திய தேசத் துரோகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர்.
🚨 காவல்துறை உறுதி
நாளை காலை 9 மணிக்குள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வோம் என காவல்துறை உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
📰 செய்தியாளர்: ஷாலு V.J.
தமிழ்நாடு டுடே – கன்னியாகுமரி மாவட்டம்