Fri. Feb 6th, 2026

கன்னியாகுமரி மாவட்டம் :
5,000 மற்றும் அதற்கு மேற்பட்டோர் பங்கேற்கும் பொது கூட்டங்கள் நடத்துவதற்காக, தமிழ்நாடு காவல் துறை சார்பில் பின்வரும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற்ற இடங்கள் & கொள்ளளவு :

நாகராஜா திடல், நாகர்கோவில் – 7,000 பேர்

அனாதை மடம் மைதானம் – 8,000 பேர்

ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானம் – 10,000 பேர்

கங்கார்டியா பள்ளி மைதானம் – 10,000 பேர்

வாவுபலி திடல், குழித்துறை – 5,000 பேர்

குளச்சல் துறைமுக மைதானம் – 5,000 பேர்

தேங்காய்பட்டணம் துறைமுக மைதானம் – 5,000 பேர்

முட்டம் துறைமுக மைதானம் – 5,000 பேர்

விவேகானந்தர் கல்லூரி மைதானம் – 10,000 பேர்

சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மைதானம் – 10,000 பேர்


மேற்கண்ட இடங்களில் கூட்டம் நடத்த விரும்பும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்கள், Bureau of Police Research and Development (BPR&D) வழிகாட்டுதலின்படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டநெரிசல்–கட்டிட பாதுகாப்பு விதிகளை கட்டாயமாக பின்பற்றி முன் அனுமதி பெற வேண்டும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை 05.02.2026 மதியம் 12.00 மணி முதல் அமலுக்கு வரும் என்றும், கூட்டம் நடத்துவோர் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்

By TN NEWS