திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாம்களின் மூலம், புதிய பயனாளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப் பயனாளிகளுக்கு ரூ.2,91,96,280 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
209 முகாம்கள் – 1200 பயனாளிகள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் மொத்தம் 209 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சமீபத்தில் நடைபெற்ற 29 முகாம்களின் வாயிலாக, சமூக பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் 1200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
எம்எல்ஏக்கள் முன்னிலையில் உதவி வழங்கல்.
இந்த நிகழ்வில்
தேவராஜ் (ஜோலார்பேட்டை),
நல்லதம்பி (திருப்பத்தூர்),
வில்வநாதன் (ஆம்பூர்)
ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு.
மேலும் திருப்பத்தூர் நகர சேர்மன் சங்கீதா வெங்கடேசன், நகர செயலாளர் எஸ். ராஜேந்திரன், நகர துணைச் சேர்மன் ஏ.ஆர். சபியுல்லா, ஜோலார்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் சத்யா சதீஷ், ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, சோலையார்பேட்டை நகர சேர்மன் காவியா விக்டர், திருப்பத்தூர் சேர்மன் விஜய் அருணாச்சலம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் திரளான பங்கேற்பு.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நலத்திட்ட பயனாளிகள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் அரசின் சேவைகள் நேரடியாக மக்களை அடைவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
செய்தி :
சதீஷ்குமார் – திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்
ஒளிப்பதிவு : ரகுநாதன்

