வடமதுரை, பிப். 2:
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வடமதுரை ஒன்றியக் குழு சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரியும், விக்சித் பாரத் – ஜி ராம் ஜி திட்டத்தை கைவிடக் கோரியும், 2.2.2026 அன்று காலை அய்யலூர் இந்தியன் வங்கி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் தலைமை:
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் திரு. சி. மருதை தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சிறப்புரை:
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் திரு. கே. அருள் செல்வன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், ஊரக வேலை உறுதித் திட்டம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் அடிப்படைத் திட்டம் எனவும், அதனை முறையாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
வாழ்த்துரை வழங்கிய தலைவர்கள்:
இந்த நிகழ்வில் தவிச முன்னாள் மாவட்ட தலைவர் திரு. பி. செல்வராஜ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் திரு. எம். மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்பு:
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் பி. முருகன், எம். கே. சம்சுதீன், குருசாமி, மீனாட்சி சுந்தரம், பி. தங்கராஜ், அஞ்சுலட்சுமி, சண்முகம் (தவிச), சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோரிக்கைகளுக்கு வலியுறுத்தல்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும், நிலுவை கூலியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், விவசாய தொழிலாளர்களுக்கு எதிரான திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
செய்தி தொகுப்பு:
சித்திரபிரகாஷ்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்