குடியாத்தம் – ஜனவரி 29
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த பேரணியை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணி குடியாத்தம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் நகர காவல் உதவியாளர் சிலம்பரசன், போக்குவரத்து உதவியாளர் சாமிகண்ணு, தனியார் பள்ளி மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாலை விதிகளைப் பின்பற்றுவதின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்