Sun. Jan 11th, 2026

மாபெரும் கைப்பந்து போட்டியைத் துவக்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன்.

தருமபுரி.

தருமபுரி மேற்கு மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளியில்,
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக நீதியின் மதிப்புகளை இளைஞர்களிடையே விதைக்கும் நோக்கத்துடனும் “திராவிடப் பொங்கல் – சமூக நீதிக்கான திருவிழா” எழுச்சியுடன் நடைபெற்றது.

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் வகையில் நடைபெற்ற இந்த விழாவின் ஒரு பகுதியாக, மாபெரும் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

சிறப்புரையில் அவர் கூறியதாவது:

“திராவிட மாடல் அரசு கல்வி, மருத்துவம் மட்டுமல்ல;
விளையாட்டுத் துறையிலும் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றி வருகிறது.
இளைஞர்களிடையே ஒற்றுமை, சமத்துவம், சமூக நீதி ஆகிய மதிப்புகளை விளையாட்டு வழியாக விதைப்பதே
இந்த ‘திராவிடப் பொங்கல்’ விழாவின் அடிப்படை நோக்கம்” என்றார்.

பொதுமக்கள் & வீரர்கள் பங்கேற்பு:

இந்த கைப்பந்து போட்டியில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

மண்டல செய்தியாளர்:
ராஜீவ்காந்தி

By TN NEWS