Sun. Jan 11th, 2026

பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 100 CCTV கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, அதற்கான CCTV கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று (டிசம்பர் 30, 2025) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் நகரில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை விரைவாக அடையாளம் காணும் வகையிலும், முக்கிய சந்திப்புகள், முக்கிய சாலைகள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த CCTV கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த CCTV கண்காணிப்பு திட்டத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்,
விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர் உமா,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன்
ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்த திட்டத்தின் மூலம் வழிப்பறி, திருட்டு, சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட குற்றங்கள் குறையும், மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் இந்த CCTV கண்காணிப்பு அமைப்பு, சட்ட ஒழுங்கை மேம்படுத்துவதோடு, குற்றச் செயல்களை உடனுக்குடன் கண்டறிந்து விரைவான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை உயரதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்:
தமிழ். மதியழகன்

By TN NEWS