Sat. Jan 10th, 2026

விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNBOA) சார்பில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் டிசம்பர் 30, 2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGS), ஊரக வளர்ச்சித்துறை, தூய்மை பாரத திட்டம், VB–GRAM உள்ளிட்ட திட்டங்களில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து ஊழியர் விரோதக் கொள்கைகளை பின்பற்றுகின்றன என்றும்,

காலமுறை ஊதிய உயர்வு வழங்கப்படாத நிலை,

பணிச்சுமை அதிகரிப்பு,

போதிய பணியிடங்கள் நிரப்பப்படாதது,

பதவி உயர்வு, சேவை பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள்
தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

மேலும், 2014-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிரந்தரப் பணியிடம் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு கூடுதல் வேலை நாட்கள், உரிய ஊதியம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து TNBOA சங்க உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அரசின் கவனத்தை ஈர்த்தனர். போராட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவு வழங்க வேண்டும் என TNBOA விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்:
தமிழ். மதியழகன்

By TN NEWS