விழுப்புரம் NCBH நிறுவனம் சார்பில், விழுப்புரம் மாவட்ட எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் புத்தாண்டு வரவேற்பு சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி. சரவணன் தலைமை வகித்தார்.
சென்னை மண்டல மேலாளர் வரவேற்புரை நிகழ்த்தி, எழுத்தாளர்கள் சமூக மாற்றத்தில் ஆற்றும் பங்கை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சௌரிராஜன் வாழ்த்துரை வழங்கி,
“எழுத்தும் கவிதையும் மக்களின் குரலாக இருந்து, சமூக அநீதிகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”
என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில்,
முனைவர் சற்குணம், பேராசிரியர் கல்யாணி, முன்னாள் நகர்மன்ற தலைவர் இரா. ஜனகராஜ், கவிஞர் அன்பாதவரன், எழுத்தாளர் இரவிகார்த்திகையன், எழுத்தாளர் செஞ்சி தமிழினியன், கவிஞர் ஜெயச்சந்திரன், கவிஞர் முத்துவேல் இராமமூர்த்தி, தோழர் அனவரதன், கவிஞர் இருசன், மக்களிசை கலைஞர் அய்யப்பன் மதுரைவீரன், கவிஞர் கௌவிந்தராஜ், கவிஞர் சாந்த விசாகர், பாரிபாபு, தோழர் கலியபெருமாள், வழக்கறிஞர் ரஸ்கின் ஜோசப், பேரா. விஜயரங்கன், காரத்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
உரையாற்றியவர்கள் அனைவரும்,
புதிய ஆண்டில் எழுத்தாளர்கள் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்;
மக்கள் பிரச்சினைகள், பண்பாட்டு அடையாளங்கள், மொழி பாதுகாப்பு போன்றவற்றை எழுத்தின் வழி முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியை விற்பனை நிலைய மேலாளர் முருகேசன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சி முடிவில், புத்தாண்டு நல்வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு, எழுத்தாளர்களிடையே கருத்துப் பகிர்வு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

