Sun. Jan 11th, 2026

விழுப்புரம்:

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக, ஊரகப் பகுதிகளைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், 14 மாவட்டங்களில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், I.A.S. அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,
விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா. இலட்சுமணன்,
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மஸ்தான், எம்.எல்.ஏ,

ஆகியோர் கலந்து கொண்டு, 30 வகையான விளையாட்டுகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கினர்.

இளைஞர் விளையாட்டு வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை:

இந்தத் திட்டத்தின் மூலம், நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட்டு,

உடல் நலன் மேம்பட மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க
வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டோர்:

இந்நிகழ்வில்,
மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம. ஜெயச்சந்திரன்,
விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு,
பேரூராட்சி மன்றத் தலைவர்கள் மீனாட்சி ஜீவா, மொக்தியார் அலி,
நகராட்சி ஆணையர், மாவட்ட விளையாட்டு அலுவலர்,
நகர திமுக கட்சி பொறுப்பாளர் எஸ். வெற்றிவேல்,
நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இளைஞர் நலனுக்கும், விளையாட்டு வளர்ச்சிக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை மீண்டும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS