ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து,
விழுப்புரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி,
100 நாள் வேலை உறுதி திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும்,
அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து,
விழுப்புரம் மத்திய மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்,கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில்,
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாக்டர் இரா. இலட்சுமணன் கண்டன உரை:
இந்த ஆர்ப்பாட்டத்தில்,
விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான
டாக்டர் இரா. இலட்சுமணன் கலந்து கொண்டு,
“ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை சமூக நீதிக்கு எதிரானது. மகாத்மா காந்தியடிகளின் பெயரை நீக்குவது வரலாற்றை அழிக்கும் செயல்” எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
தலைவர்கள், கூட்டணி கட்சிகள் பங்கேற்பு:
இந்த ஆர்ப்பாட்டத்தில்,
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் – இரா. ஜனகராஜ், வழக்கறிஞர் இரா. கண்ணப்பன்
ஒன்றிய கழகச் செயலாளர்கள் – P. தெய்வசிகாமணி, தே. முருகவேல், கப்பூர் ராஜா,
கொத்தமங்கலம் B. சந்திரசேகர்
கோலியனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் – இ. சச்சிதானந்தம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் – ராமமூர்த்தி
காங்கிரஸ் மாவட்ட செயலாளர் – RTV. சீனுவாசன்
விசிக மாவட்ட செயலாளர் – பெரியார்
நகர கட்சி பொறுப்பாளர்கள் – இரா. சக்கரை, S. வெற்றிவேல்
வளவனூர் பேரூராட்சி செயலாளர் – பா. ஜீவா
பொதுக்குழு உறுப்பினர்கள் – பஞ்சநாதன், TNJ. சம்பத்
தமுமுக மாநில செயலாளர் – முஸ்தாக்
CPI மாவட்டக் குழு உறுப்பினர் – வழக்கறிஞர் திலகவதி
CPM மாவட்ட செயற்குழு உறுப்பினர் – வழக்கறிஞர் சங்கரன்
காங்கிரஸ் நிர்வாகிகள் – காஜா மொய்தீன், செல்வராஜ்
மதிமுக – ராமகிருஷ்ணன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி – சுமன், மோகன், தீனா
உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஒன்றிய–நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான உறுதியான அரசியல் வெளிப்பாடாக அமைந்தது.


✍️ V. ஜெய்சங்கர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
தமிழ்நாடு டுடே – மக்கள் தொடர்பு அதிகாரி
