சென்னை, புதுப்பேட்டை | டிசம்பர் 17, 2025 :
தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில், தங்களின் 20 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாததை கண்டித்து, இன்று சென்னை புதுப்பேட்டை பகுதியில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பேரணியில் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நுட்பனர்கள் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தப் பேரணி காரணமாக புதுப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறுகிய நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு டுடே
சென்னை செய்தியாளர் : எம். யாசர் அலி
ஒளிப்பதிவாளர் : ராஜேஷ்


