டெல்லி | டிசம்பர் 15 –
டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி குமார் அவர்களை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு வழக்கறிஞர் C.ராபர்ட் புரூஸ் அவர்கள் நேரில் சந்தித்து, நெல்லை–தென்காசி பகுதிகளின் மக்கள் நலன் சார்ந்த முக்கிய ரயில் மற்றும் போக்குவரத்து கோரிக்கைகளை முன்வைத்தார்.
அவரது கோரிக்கைகள் வருமாறு:
1. தாம்பரம்–செங்கோட்டை இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் (20683–84) ரயிலை வாரம் 7 நாட்கள் இயக்க வேண்டும்.
2. பாவூர்சத்திரம்–மேட்டூர் பகுதியில் உள்ள லெவல் கிராசிங் 79-ஐ ரத்து செய்து, இணைப்பு சாலை மூலம் 80-ல் இணைக்க வேண்டும்; லெவல் கிராசிங் 81-ஐ ரத்து செய்து சப்வே அமைக்க வேண்டும்.
3. நெல்லை–தென்காசி–சேலம் வழியாக பெங்களூருக்கு புதிய ரயில் இயக்க வேண்டும்.
4. நெல்லை–தென்காசி–மதுரை–பொள்ளாச்சி–கோயம்புத்தூர் வழியாக ஈரோட்டுக்கு புதிய ரயில் இயக்க வேண்டும்.
5. டெல்லி–மதுரை இடையே இயங்கும் சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் (12651–52)-ஐ தென்காசி வழியாக நெல்லை வரை இயக்க வேண்டும்.
6. கீழப்புலியூர்–கடையநல்லூர் பைபாஸ் வழித்தடம் அமைக்க வேண்டும்.
7. பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம் ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் தென்காசி, நெல்லை மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் உள்ளதாக எம்பி தெரிவித்தார்.
ஜே.அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர், தென்காசி