Tue. Dec 16th, 2025



டிசம்பர் 19 முதல் 29 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது

காஞ்சிபுரம், டிசம்பர் 2025 :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025 வரும் 19.12.2025 முதல் 29.12.2025 வரை, 11 நாட்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புத்தகத் திருவிழா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/மாணவியர்கள் அறிவுப் பயன் பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆகியவற்றின் இணைப்புடன் இந்த நான்காவது மாபெரும் புத்தக திருவிழா நடத்தப்படுகின்றது.

இந்த புத்தகத் திருவிழா நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து முன்னணி பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.
மொத்தம் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், 1000-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள், மற்றும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இப்புத்தகத் திருவிழா அறிவுப் பசிக்கு மாபெரும் விருந்தாக அமையும் வகையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெறுகின்றன.
மேலும்,

தினந்தோறும் சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரைகள்,

சிந்தனை தூண்டும் பேச்சு நிகழ்ச்சிகள்,

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்,

கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்
ஆகியவையும் நடைபெற உள்ளன.


எனவே, புத்தக ஆர்வலர்கள், மாணவ/மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு அறிவுப் பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பெ. லோகநாதன்
காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர்

By TN NEWS