Wed. Dec 17th, 2025



ஆயிரம் மாணவர்கள் தடுப்பூசி அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தருமபுரி, டிசம்பர் 12:
நாடு முழுவதும் நடைபெற்று வரும் 64வது தேசிய மருந்தியல் வார விழாவை முன்னிட்டு, தருமபுரியில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

பழைய ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை,
தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள்:

விழிப்புணர்வு ஊர்வல துவக்க நிகழ்ச்சியில் பல்வேறு அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்:

சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன்

தருமபுரி நகராட்சி தலைவர் லட்சுமி

ஸ்ரீ விஜய் வித்யாலயா பார்மசி கல்லூரி தலைவர் டி.என்.சி. மணி வண்ணன்

செயலாளர் ராம்குமார்

நிர்வாக அலுவலர் விக்ரமன்

முதல்வர் செந்தில் குமார்

மருத்துவத்துறை அலுவலர்கள்

தடுப்பூசி அவசியம் குறித்து உறுதிமொழி!

ஊர்வல துவக்கத்திற்குப் பின்னர்,
ஆட்சியர் சதீஷ் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவன மாணவ–மாணவிகள்
தடுப்பூசியின் அவசியம் மற்றும்
மருந்து பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு:

நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா பார்மசி கல்லூரியில் இருந்து
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

மருந்து பயன்பாட்டின் பாதுகாப்பு, தடுப்பூசி முக்கியத்துவம், நோய் தடுப்பு நடைமுறைகள் குறித்து கோஷங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊர்வல பாதை விழிப்புணர்வு ஊர்வலம்:

செந்தில் நகர்

இலக்கியம்பட்டி

பாரதிபுரம்

வழியாக பயணித்து முடிவுற்றது.


மண்டல செய்தியாளர்:

ராஜீவ் காந்தி

By TN NEWS