Wed. Dec 17th, 2025


AICCTU சார்பில் மனு அளித்ததைத் தொடர்ந்து அதிவேக நடவடிக்கை – மாதாந்திர ஊதியம் ஒழுங்குபடுத்தப்படும் என உறுதி.

தென்காசி மாவட்டம் கடைய ஊராட்சி ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தூய்மை காவலர்களின் நவம்பர் மாத ஊதியம் வழங்கப்படாதது குறித்து, AICCTU தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர்கள் & காவலர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஊராட்சியில் 23 கிராமங்களுக்கு கூடுதல் தூய்மை பணியாளர்கள் தேவை.

வெங்கடாம்பட்டி ஊராட்சிக்குள் மொத்தம் 23 கிராமங்கள் உள்ளதால், அந்தப் பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக
கூடுதல் தூய்மை பணியாளர்கள் / காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

அரசாணை எண் 62–ன் படி ஊதியம் வழங்க கோரிக்கை
சங்கம் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:

தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 62ன் படி,
தூய்மை பணியாளர்கள் / காவலர்களுக்கு மாத ஊதியம்
₹12,792 வழங்க வேண்டும்.

நீண்ட காலமாக பணியாற்றும் அனைவர்ும்
நிரந்தரப்படுத்தப்பட வேண்டும்.

மனு அளித்தவர்கள்:

இந்த மனு, AICCTU தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர்கள் & காவலர்கள் சங்கம் சார்பாக, சங்கத்தின் கிளைத் தலைவர் கலாராணி தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மனு நடவடிக்கையில்AICCTU மாவட்டத் தலைவர் மற்றும்
CPI(ML) கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர்
தோழர் M. வேல்முருகன் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

அதிகாரிகள் உடனடி நடவடிக்கை: நவம்பர் மாத ஊதியம் செலுத்தப்பட்டது.

தென்காசி மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து,

அவர்கள் வெங்கடாம்பட்டி ஊராட்சி நிர்வாகத்துடன் உடனடியாக பேசி,

அனைத்து தூய்மை காவலர்களுக்கும் 2025 நவம்பர் மாத சம்பளம் வங்கிக் கணக்கில் உடனடியாக ஏற்றப்பட்டது.

மாதந்தோறும் 5ஆம் தேதி சம்பளம் வழங்கப்படும், அதிகாரிகள் உறுதி.

அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது:

அடுத்த மாதங்களிலிருந்து ஊராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை காவலர்களின் சம்பளம்
ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள்
வங்கி கணக்கில் வருமாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் தூய்மை காவலர்கள் நியமனம் பற்றியும் உறுதி

கூடுதல் நியமனம் தொடர்பான கோரிக்கைக்கு அதிகாரிகள் பதில்:

ஊராட்சியின் நிதி நிலையைப் பொறுத்தும்,

உண்மையாக தூய்மை பணியாளர் தேவைப்படும் கிராமங்களில் கூடுதல் தூய்மை காவலர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்
என தெரிவித்தனர்.

20க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் பங்கேற்றனர்
இந்த மனு சமர்ப்பிப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடவடிக்கையில்
20க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் கலந்து கொண்டு
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அமல்ராஜ்

தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்

By TN NEWS