Tue. Dec 16th, 2025

 

📰 பத்திரிகை வெளியீடு

நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக, மதுரைக் கிளை நீதிபதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.


சென்னை:

நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, Federation Of Lawyers Organizations For Democracy & Secularism சார்பில் சென்னை மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அணி கிளை தலைவர் இஸ்மாயில் தலைமையில், எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த பல்வேறு வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள்,
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்,
அவர் அவ்வாறு செய்யத் தவறினால்,
மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இணைந்து பாராளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் (Impeachment Motion) கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், நீதித்துறையின் சுயாதீனமும், ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளும் பாதுகாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், அதற்காக சட்டப் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

வெளியீடு:
Federation Of Lawyers Organizations For Democracy & Secularism
ஒருங்கிணைப்பு: SDPI – வழக்கறிஞர் அணி

#SDPIProtest
#SDPI


ஷேக் முகைதீன்

இணை ஆசிரியர்.

By TN NEWS