Tue. Dec 16th, 2025

பாலக்கோடு வட்டம் – கரகத்தஹள்ளி ஊராட்சி
TNHB குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில்
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிப்பு

டிசம்பர் 6, 2025.

பாலக்கோடு வட்டம், கரகதஹள்ளி ஊராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், மகாகவி பாரதியார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் சட்ட மேதை, சமூகப் புரட்சியாளர் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று காலை மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு, சமூக சேவகர் மற்றும் TNHB குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் திரு. என். சரவணன் (CPI) அவர்களின் தலைமையிலும் ஒருங்கிணைப்பிலும் சிறப்பாக நடைபெற்றது.

மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தல்:

காலை 9 மணிக்கு நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், டாக்டர் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு
பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள், சங்க நிர்வாகிகள் அனைவரும் இணைந்து ரோஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பங்கேற்றோர்:

நிகழ்வில் சிறப்பு பங்கேற்பாளர்களாக,

திரு. கணேசன் – நலச் சங்க தலைவர்

திருமதி அம்மாசி – துணைத் தலைவர்

திரு. லோகநாதன் – துணைச் செயலாளர்

திரு. ரகுபதி – ரியல் எஸ்டேட்

திரு. இலியாஸ்

திரு. இளங்கோ (VAO, ஒய்வு)

திரு. கிருஷ்ணன் (ஆசிரியர், ஒய்வு)

திரு. சிவசங்கர் (பட்டு வளர்ச்சி துறை, ஒய்வு)

திரு. வாசுதேவன்

திரு. இளங்கோ (BSNL, ஒய்வு)


ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கரின் சமூக நீதி, சமத்துவ கோட்பாடுகளை நினைவுகூர்ந்தனர்.

பெருமளவு TNHB குடியிருப்பு பொதுமக்களும் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதால் நிகழ்வு உணர்வுமிக்கதாக அமைந்தது.

இந்த நினைவஞ்சலி நிகழ்வு முழுவதுமாக சமூக சேவகர் என். சரவணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி

By TN NEWS