Tue. Dec 16th, 2025


நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கி நாட்டின் நிர்வாகத்திற்கு அடித்தளத்தை அமைத்த சட்ட மேதை அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் கடத்தூரில் நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு, மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி அர்ச்சனா அவர்களின் முன்னிலையிலும், கையூட்டு மட்டும் ஊழல் ஒழிப்பு பாசறை மாநில துணைத் தலைவர் பா. ஜெபசிங் அவர்களின் தலைமையிலும் சிறப்பாக நடைபெற்றது.

அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை:

நிகழ்வில் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்,

திரு சிலம்பரசன்

திரு தமிழருவி

திருமதி பாப்பாத்தி

திரு வினோத் குமார்

திரு சின்னசாமி

திரு ஹரிகிருஷ்ணன்


ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு, அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கர் வலியுறுத்திய சமூக நீதி, கல்வி உரிமை, அடக்குமுறைக்கெதிரான போராட்டம் போன்ற கோட்பாடுகளை நினைவு கூரும் விதமாக நிகழ்வு அமைதியான சூழலில் நடத்தப்பட்டது.

பசுபதி, செய்தியாளர்

By TN NEWS