Wed. Dec 17th, 2025

 

02/12/2025.
சென்னை மாவட்ட செய்திகள்


அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் பீ. ரவி  வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாக ..!

*மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு உரிய இழப்பீடுகள் வழங்குவார்களா?*

*டிட்வா புயலால் வடகடலோர மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிட்வா புயல் தொடர்ந்து வடகடலோர மாவட்டங்களில் தொடர்ந்து நிலை கொண்டு இருப்பதால், தொடர்ந்து கனமழை கடலிலும் , கடற்கரை ஓரங்களிலும் பெய்து கொண்டு இருப்பதினால், துறைமுகம் சார்ந்த பகுதிகளான சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட படகுகளில் மழை வெள்ளமும், கடல் நீரும் படகுக்குள் உட்பகுந்து உள்ளதால், விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் விசைப்படகுகளை காப்பாற்ற இரவு, பகல் என்று பாராமல் படகுக்குள் ஏறி உள்ள மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள்.*

*இந்த நிலையில் மீனவர்களுடைய முயற்சிகள் பலன் அழிக்காத விதத்தில் 50க்கும் மேற்பட்ட படகுகளில் மழை நீரும், கடல் நீரும் உட்பகுந்து வந்து கொண்டிருக்கிறது,*

*சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல படகுகள் கடலுக்குள் மூழ்க தொடங்கியுள்ளது.*

*சென்னை வண்ணாரப்பேட்டையைச் சார்ந்த ஜெ. தணிகைமலை என்பவருக்கு சொந்தமான IND-TN-02MM-2043. என்ற எண் கொண்ட விசைப்படகு, விசைப்படகின் உரிமையாளர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் முயற்சி பலனளிக்காமல், விசைப்படகை காப்பாற்ற முடியாமல், கடலுக்குள் விசைப்படகு மூழ்கிக் கொண்டிருப்பதை பார்த்து கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்.*

*மேலும் மத்திய, மாநில அரசுகள் மூழ்கிய படகுகளையும், சேதமடைந்த படகுகளையும்  போர்க்கால அடிப்படையில் பார்வையிட்டு, உரிய இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.*

*மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், எதிர்கட்சி தலைவர் அவர்களும், தமிழக வெற்றி கழகத்துடைய தலைவர் விஜய் அவர்களும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.*

தமிழ்நாடு டுடே சென்னை மாவட்ட செய்தியாளர் எம் யாசர் அலி.

By TN NEWS