


சின்னமனூர் | டிசம்பர் 1, 2025
சின்னமனூர் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் பல நாட்களாக குவிந்து கிடந்த குப்பைகள், பொதுமக்களின் தொடர் புகார்களுக்கு பிறகு இன்று சின்னமனூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களால் முழுமையாக அகற்றப்பட்டன.
அங்கு நீண்ட நாட்களாக குப்பை மலைபோல் குவிந்து, துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் செல்லும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். சுகாதாரச் சீர்கேடு காரணமாக, கொசு பரவல் மற்றும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டதாக மக்கள் பலமுறை புகார் அளித்திருந்தனர்.
பொதுமக்களின் தொடர்ந்து எழுந்த கோரிக்கையை அடுத்து, நகராட்சி ஆணையர் நேரடியாக உத்தரவு வழங்க, இன்று காலை தூய்மைப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, லாரிகள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தி அனைத்து குப்பைகளையும் முழுமையாக அகற்றினர்.
பல வாரங்களாக நீடித்த சுகாதாரப் பிரச்சனையிலிருந்து விடுபட்டதாக கூறிய பொதுமக்கள், நகராட்சி நிர்வாகத்திற்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
செய்தி & தகவல் :
அன்பு பிரகாஷ் முருகேசன்
தேனி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர்
