Wed. Feb 4th, 2026

 
திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியம், ஆவிக்கொளப்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் கோவிந்தன் (த/பெ. கேசவன்) அவர்களின் வீடு சமீபத்திய கனமழையால் இடிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சேதமடைந்த வீட்டு நிலையைப் பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி மற்றும் அவசர நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:

டி.என். முருகன் – மாவட்ட துணைச் செயலாளர்

மு. தங்கம் – மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் & திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்

கு. தீனதயாளன் – திருக்கோவிலூர் மத்திய ஒன்றிய செயலாளர்

கோபிகிருஷ்ணன் – நகர கட்சி செயலாளர்

குணா – நகர அவைத்தலைவர்

ஏழுமலை – ஒன்றிய துணைச் செயலாளர்

சுப்ரமணி – கிளை செயலாளர்

நிஜாம் – வழக்கறிஞர்

வெங்கடாசலம் – ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர்
உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டு குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
PRO

By TN NEWS