Wed. Dec 17th, 2025

தருமபுரி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி நடைபெற்று வருகிறது. இதன் முன்னேற்ற நிலையை மதிப்பாய்வு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

04.11.2025 முதல், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி வருகின்றனர். வாக்காளர்கள் பெற்றுள்ள இந்த படிவங்களை பூர்த்தி செய்து மீண்டும் BLO-களிடம் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் படிவங்களின் தகவல்கள் தான் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

படிவத்தை மீண்டும் வழங்காத வாக்காளர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறாது என்பதை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு படிவத்திலும் BLO-வின் மொபைல் எண் அச்சிடப்பட்டிருப்பதால் அவர்/அவர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை;

வட்டாட்சியர் அலுவலகம்

கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்

வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
எனும் மையங்களிலும் சமர்ப்பிக்கலாம்.

உதவி மைய எண்கள்:

மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு அறை: 1950

தேர்தல் உதவி WhatsApp: 94441 23456

தருமபுரி வாக்காளர் பதிவு அலுவலர்: 04342-260927

பாலக்கோடு: 04348-222045

பென்னாகரம்: 04342-255636

பாப்பிரெட்டிப்பட்டி: 04346-246544

அரூர்: 04346-296565


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் சிறப்பாக நடை பெற, அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது அரூர் வட்டாட்சியர் திரு. பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பல BLO-கள் உடனிருந்தனர்.

மண்டல செய்தியாளர்
ராஜீவ்காந்தி

By TN NEWS