பொம்மிடி, நவம்பர் 22:
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பொம்மிடி ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திறப்பு விழாவிற்கான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதே வேளையில், பொம்மிடி பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து,
12675/12676 கோவை விரைவு ரயில்,
16315/16316 பெங்களூரு விரைவு ரயில்,
12695/12696 திருவனந்தபுரம் விரைவு ரயில்
ஆகிய மூன்று முக்கிய ரயில்களும் பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பல முறை ரயில்வே அதிகாரிகளிடம் இது குறித்து மனுக்கள் அளித்து வலியுறுத்தப்பட்ட நிலையில், கூடுதல் ரயில்கள் பொம்மிடி நிலையத்தில் நிறுத்தம் பெற மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வணிகர் சங்க நிர்வாகிகள் B.R.M. மாதேஸ், ஆசாம்கான், நாகசேகர் ஆகியோர் முன்னிலையில், தென்னக ரயில்வே ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் அறிவழகன், காமராஜ், பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில்வே பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள் ஜெபசிங், சங்கீதாஸ்ரீ, இளங்கோவன், முனிரத்தினம், வெங்கடேசன், ஹரிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வெல்டிங் சிவா, சுரேஷ், ரஃபீக் ஆகியோர் செய்திருந்தனர்.
மண்டல செய்தியாளர்
டி. ராஜீவ் காந்தி