பாப்பிரெட்டிப்பட்டி, நவம்பர் 22:
இன்று (22.11.2025) காலை 10 மணியளவில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் “நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் துவக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,கழக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் ஈ.வி. வேலு மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக, அவர்களது வாழ்விடங்களுக்கு நேரடியாக சென்று உயர்தர மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
துவக்க நிகழ்வில் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
மண்டல செய்தியாளர்
டி. ராஜீவ் காந்தி


