Sun. Dec 21st, 2025



பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கடாசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் சார்பில் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க வட்டத் தலைவர் தோழர் குப்பன் மற்றும் மாதர் சங்க வட்ட செயலாளர் தோழர் கிருஷ்ணவேணி தலைமையேற்றனர்.

இந்நிகழ்வில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா, SFI முன்னாள் மாநில துணைத் தலைவர் தோழர் தனுஷன், மாதர் சங்க மாவட்ட தலைவர் தோழர் ஜெயா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மேலும் மாதர் சங்க தோழர் மீனாட்சி, வட்ட தலைவர் இளவரசி, பொருளாளர் தோழர் தங்கம் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் வாலிபர் சங்க தோழர்கள் விவேகானந்தன், தோழர் ராஜேஸ்வரி, கவிநிலவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட நிறைவில் வாலிபர் சங்க வட்ட துணைத் தலைவர் தோழர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

மண்டல செய்தியாளர்
D. ராஜீவ் காந்தி

By TN NEWS