தருமபுரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு – சமூக அமைப்புகளின் மனிதாபிமானச் சேவைகளை பாராட்டி மகிழ்வித்தனர்.
தருமபுரி நகரில் கடந்த மூன்று நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி தனியாக சுற்றித் திரிந்து வந்ததாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களின் தகவலின் பேரில் மை தருமபுரி NGO மற்றும் அறம் அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இன்று காலை, அமைப்பினரின் முயற்சியுடன் பெண் காவலர்கள் மயில், தாமரைச்செல்வி ஆகியோர் உதவியுடன் அந்த பெண்மணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பின்னர் அவரை தருமபுரி அரசு மருத்துவமனை மனநல காப்பகப் பிரிவில் அனுமதித்தனர்.
மருத்துவ அலுவலர் மருத்துவர் பழனியப்பன் மற்றும் மருத்துவர் ப்ரிதா முன்னிலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது, அந்த பெண்மணி தனது பெயரை ‘மஞ்சுளா’ என கூறியதுடன், தெலுங்கு மொழியில் பேசுவதாக தெரிந்தது. குடும்பத் தகவல் இன்னும் தெரியவில்லை.
இந்த மனிதாபிமான மீட்பு பணியை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா,
அறம் அறக்கட்டளை பிரதிநிதி ரமேஷ்,
பெண் காவலர்கள் மயில், தாமரைச்செல்வி
ஆகியோரை மருத்துவர் பழனியப்பன் அவர்கள் பாராட்டினார்.
வே. பசுபதி
மாநில மக்கள் செய்தி தொடர்பு அலுவலர்