Thu. Nov 20th, 2025

இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 109-வது பிறந்தநாள், தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் விழா!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், போ. மல்லாபுரம் பகுதியில் இன்று (19.11.2025) முன்னாள் பிரதமர், நாட்டின் இரும்பு பெண்மணி என போற்றப்படும் இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் 109 ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்பு நினைவு நாளாகக் கொண்டாடப்பட்டது.

போ. மல்லாபுரம் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில்,
நகர தலைவர் F. ராபர்ட் (ராஜ்) தலைமையில்,
நகர வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

நாடு கட்டியெழுப்பல், பெண்கள் முன்னேற்றம், தேசிய பாதுகாப்பு, கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இவரது பங்களிப்பை வலியுறுத்தி, காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்துரைகள் வழங்கினர்.

மண்டல செய்தியாளர்
D. ராஜீவ்காந்தி

By TN NEWS