Wed. Nov 19th, 2025



“ஒரு குக்கிராமத்தின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி”

என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கும் வகையில்,
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் வேலம்பாளையம் கிராமத்தில், ஊராட்சி கட்டிடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்திய அஞ்சல் துறை அலுவலகம், எந்த விதமான சட்ட அறிவிப்புமோ, கால அவகாசமோ இன்றி, ஒரே வாரத்தில் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவை ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் மொடக்குறிச்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) திருநாவுக்கரசு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த அஞ்சல் அலுவகம் பாதுகாப்பின்றி வாடகைக் கட்டிடத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அவல நிலையை உடனடியாக சரிசெய்து, மீண்டும் ஊராட்சி கட்டிடத்திலேயே அஞ்சல் அலுவகத்தை இயங்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர் பி. தர்மராஜ் அவர்கள்,
தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் E-mail மூலம் புகார் மற்றும் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.

ஊராட்சியின் கீழ் பல கட்டிடங்கள் பயன்பாட்டின்றி பூட்டியவாறே இருந்தபோதும், செயலில் உள்ள அஞ்சல் அலுவகத்தையே வெளியேற்றியிருப்பது “நயவஞ்சகமும் சந்தேகத்திற்குரிய முடிவும்” என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதன் மூலம் :
“ஒன்றிய அரசின் திட்டத்தை மாநில அரசு ஒரங்கட்டுகிறதா?
அல்லது உள்ளூர் அரசியல் தந்திரமா?”
என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா என்பது குறித்து பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

📸 நகல் இணைப்பு : புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
🖋️ பி. தர்மராஜ்
மாவட்ட நிருபர் – ஈரோடு

By TN NEWS