Thu. Aug 21st, 2025

சென்னை:
தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாகி, அந்த பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்பது கல்வி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது 31,332 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 18,46,550 மாணவ–மாணவியர் கல்வி கற்கின்றனர். ஆனால் சில பள்ளிகளில் ஒற்றை இலக்க மாணவர்களே உள்ளனர். சில இடங்களில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்கும் நிலையும் காணப்படுகிறது.

மாணவர் சேர்க்கை ஏன் குறைந்தது?

கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

“நான்கு ஆண்டுகளுக்கு முன் கொரோனா கால பொருளாதார நெருக்கடியால், அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்தது. ஆனால், கொரோனா முடிந்த பின் பெற்றோர் மீண்டும் தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்கின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. இந்த ஆண்டு 207 பள்ளிகளில் ஒரு மாணவரும் இல்லாததால் அவை மூடப்பட்டுள்ளன. அந்தப் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள், அருகிலுள்ள பிற அரசு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என தெரிவித்தனர்.

கிராமப்புறங்களில் நிலைமை மோசம்;

குக்கிராமங்களில் இயங்கும் சில அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கைக்காக முயற்சி மேற்கொள்ளாதது, மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை ஆகியவை, சேர்க்கை குறைவுக்கு காரணமாகும்.
சில அரசு தொடக்கப் பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தாலும், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், பெற்றோர் ஆங்கில வழிக் கல்வியுடன் கூடிய தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்.

பெற்றோர் கோரிக்கை;

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, தரமான உள்கட்டமைப்பு, ஆசிரியர் பணியிடங்கள், மற்றும் ஆங்கில வழிக் கல்வி வசதி ஏற்படுத்தினால், பள்ளி மூடல் போன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தவிர்க்கப்படும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.


மாவட்ட வாரியாக மூடப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கை;

நீலகிரி – 17

சிவகங்கை – 16

திண்டுக்கல் – 12

சென்னை – 10

ஈரோடு – 10

மதுரை – 10

கோவை – 9

ராமநாதபுரம் – 9

தூத்துக்குடி – 8

தர்மபுரி – 7

திருப்பூர் – 7

விருதுநகர் – 7

கள்ளக்குறிச்சி – 6

சேலம் – 6

வேலூர் – 6

நாமக்கல் – 6

கிருஷ்ணகிரி – 5

திருச்சி – 5

திருநெல்வேலி – 5

செங்கல்பட்டு – 4

கன்னியாகுமரி – 4

கரூர் – 4

தஞ்சாவூர் – 4

திருவள்ளூர் – 4

விழுப்புரம் – 4

திருவண்ணாமலை – 3

புதுக்கோட்டை – 3

ராணிபேட்டை – 3

தேனி – 3

கடலூர் – 2

தென்காசி – 2

திருப்பத்தூர் – 2

காஞ்சிபுரம் – 2

நாகப்பட்டினம் – 1

திருவாரூர் – 1
மொத்தம்: 207 பள்ளிகள்


அண்ணாமலையின் சொந்த ஊர் பள்ளியும் மூடல்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகிலுள்ள தொட்டம் பட்டி கிராமம், முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் சொந்த ஊராகும். கடந்த லோக்சபா தேர்தலில், அவர் க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட, உத்துப் பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார். தற்போது, மாணவர்கள் இல்லாத காரணத்தால் அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, அனைத்து தரப்பினரின் வாதம் அல்லது எண்ணம் மற்றவர்களை குறைவான நோக்கத்தில் பேசுவது. உண்மையான நிலைமை ஆராய்ந்து பார்த்தால் தவறு அல்லது கவனக் குறைவு மற்றும் அலட்சியமும் அனைத்து தரப்பினரின் செயலில் உள்ளது.

உதாரணமாக:

அரசின் கல்வித்துறை:

இந்த துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அரசு பள்ளிகள் மற்றும் அதன் தரம், கட்டிடம், மாணவர்கள் கழிவறை சுத்தமாக வைப்பது, மாணவ மாணவியருக்கு கல்வியில் ஊக்கத்தை தருவது, தலைமை ஆசிரியர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை கண்காணிப்பு என பலவகையான நிர்வாகம் உள்ளிட்ட பணிகளை சரியான முறையில் மேற்கொள்ளாது, அரசின் நிர்வாகத்தில் கவனக்குறைவு ஏற்படும் போது இத்தகைய நிலை தவிர்க்க முடியாதது.

பெற்றோர்கள்:

ஆசிரியர்கள்:

இன்றைய வாழ்க்கைச் சூழல்களில் ஈடு செய்ய முடியாத நிலையில் தனது பணியை பயத்துடன் செய்து வருகின்றனர். உதாரணமாக கண்டிப்புடன் படிப்பை கொண்டு செல்ல முடியாத நிலையில் ஆசிரியர்கள் இயலாதவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இதேபோல் தனியார் பள்ளிகள் எனில் நிர்வாகம் மிகவும் தெளிவான முடிவை எடுக்க முடியும். தவறிழைக்கும் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் மூலம் கண்டிக்கும் போது மாணவர்கள் இயல்பு நிலையில் இருக்கிறார்கள். இது அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் பணி முறையாக செய்ய முடியாது.

தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்க்கும், வாழ்க்கை நெறிமுறைகளை உருவாக்கத் தேவையான அனைத்து நெறிமுறைகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் தான் முன்னோடி. தவறு செய்யும் ஆசிரியர்கள் தண்டிக்கப்படவும், கண்டிக்கப்படவும் வேண்டும். அதேவேளை நல்ல ஆசிரியர் நிச்சயமாக குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்து ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்கிறார்கள். இதை புரிந்து அரசு பள்ளிகளில் சேர்வதற்கு குழந்தைகளுக்கு ஊக்கம் தரவேண்டும்.

📌 Tamilnadu Today News
இணை ஆசிரியர்: சேக் முகைதீன்

By TN NEWS