Fri. Aug 22nd, 2025


குடியாத்தத்தில் ஆட்டோ – இருசக்கர வாகனம் மோதி விபத்து
குடியாத்தம், ஆகஸ்ட் 8:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சற்குணம், தனது குடும்பத்தினருடன் காட்பாடி சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நாய் திடீரென குறுக்கே வந்ததால், அவர் ஆட்டோவை இடப்புறம் திருப்பினார்.

இதில், கதிர்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், ஆட்டோவை மோதியது. தாக்கத்தின் பேரில் ஆட்டோ கவிழ்ந்து, அதில் இருந்த மூன்று பெண்களுக்கு காயம் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீசார், காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS