🟩 விவசாய முன்னேற்ற கழகம்
🟩 மாநிலத் தலைமைக் கழக செய்தி வெளியீடு
📍 நாமக்கல், மோகனூர் | தேதி: 07.08.2025
அமெரிக்க வரி விதிப்பு இந்திய விவசாயத்துக்கு எதிரான நடவடிக்கை – விவசாய முன்னேற்ற கழகம் கண்டனம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50% வரி விதிப்பு செய்ய தீர்மானித்திருப்பது, இந்திய விவசாய பொருள்கள் மீது நியாயமற்ற அழுத்தம் கொடுக்கிறது. இது உலக நாடுகள் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, இந்திய விவசாயத்தை பாதிக்கிற உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இன்று நடைபெற்ற எம்.எஸ். சாமிநாதன் நூற்றாண்டு விழாவில்,
“இந்திய விவசாயிகளுக்கு எதிராக எந்தவொரு இறக்குமதி ஒப்பந்தத்துக்கும் இடமளிக்க மாட்டோம்”
என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இந்திய விவசாயிகளும் மக்களும், முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி கண்டதைப் போன்று, இப்போது அமெரிக்கா தொடுக்க முயலும் பொருளாதாரப் போரையும் எதிர்கொள்வதில் ஒருமித்தமாக இருக்கிறார்கள்.
140 கோடி மக்கள் கொண்ட நமது தேசம்,
“1950 ஆம் ஆண்டில் இல்லாமல், இன்று 2025ல் நாம் இருப்பதை”
அமெரிக்கா உணர வேண்டும்.
இந்தியாவுக்கு எந்த ஒரு வெளிநாட்டு உதவியின்றியும் தன்னிறைவை அடைந்திருக்கும் இந்நேரத்தில், இந்திய பொருளாதாரத்தை தடுக்க முயற்சிக்கும் அமெரிக்காவின் அணுகுமுறை வெற்றியடையாது.
அமெரிக்கா 50% வரி விதிக்கிறதென்றால், இந்திய பிரதமர் 75% வரி விதிக்க தயங்க மாட்டார், என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும்.
இது போல பொருளாதார அழுத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்காக அல்ல; மாறாக, நமது தாய்நாட்டின் வலிமையை உலகிற்கு மீண்டும் நினைவுபடுத்தும் ஒரு வாய்ப்பாக மாறும்.
🎶 “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் – ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்”
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்தியா செயல்படுகிறது என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
✊ இந்தியா ஒருபோதும் இந்த மிரட்டல்களுக்கு தலை வணங்காது!
🤝 இந்திய அரசுக்கு நாங்கள் முழுமையாக ஆதரவளிக்கிறோம்!
🔰 கா. பாலசுப்ரமணியன்
மாநில பொதுச் செயலாளர்,
விவசாய முன்னேற்ற கழகம்,
மோகனூர், நாமக்கல் – தமிழ்நாடு – இந்தியா.
சேக் முகைதீன் – இணை ஆசிரியர்