வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஆர். எஸ். பெரியார் பட்டறை நாகல் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில், இன்று (03.08.2025) கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி பக்தி சிறப்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆலய நிர்வாகி ராணி அம்மாள் தலைமையேற்றார். பக்தர்கள் செவ்வாடை அணிந்து பால்குடம் மற்றும் தீச்சட்டிகள் எடுத்து ஆலயத்திற்கு வந்தனர்.
முன்னதாக ராதா நகரில் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் பக்தர்கள் கரகம் மற்றும் தீச்சட்டி எடுத்து பம்பை, மேளதாளக் கலைஞர்களுடன் ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர்.
பின்னர் ஓம் சக்தி புற்று அம்மனுக்கு கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி ராணி அம்மாள் செய்திருந்தார்.
– குடியாத்தம் செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்