வேலூர் மாவட்ட கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சார்பில், 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் இணைந்து, கடந்த 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று குடியாத்தம் கணபதி நெசவாளர் நகரம், லிங்குன்றத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் தொண்டு மன்ற அவைத்தலைவர் ப. ஜீவானந்தம் அவர்கள் தலைமையிலும், பொதுச் செயலாளர் முனைவர் வே. வினாயகமூர்த்தி அவர்களின் தொடக்க உரையுடனும் நடைபெற்றது.
துணைத் தலைவர் மா. கோ. ஞானசேகர் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக லிங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிநாயகி ஜடையப்பன், முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வி சந்திரசேகர், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா. அன்பரசன், திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் க. செந்தில்குமார், ஆசிரியர் ஜெ. தமிழ்ச்செல்வன், ஈசன் அறக்கட்டளை சக்திவேல், சமூக ஆர்வலர் நபீஸ் அகமது, ஊர் பெரியவர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
முகாமின் ஏற்பாடுகளை பொருளாளர் கோ. ஜெயவேலு, துணை பொதுச் செயலாளர் ப. பொன்னரசு, இளஞரணி ஆகாஷ், அஜீத், தரணி, ஏ. கி. திகழரசு ஆகியோர் செய்திருந்தனர்.
முகாமில் கண் புரை, நுரையீரல் பரிசோதனை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவை நடைபெற்றன.
நூற்றுக்கும் மேற்பட்டோர் இம்முகாமில் பங்கேற்றனர். இதில் 20 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சைக்காக சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டது.
– குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்