தஞ்சை அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் காவேரி அன்னை கலை மன்றத்தின் 55-ம் ஆண்டு நாடக போட்டி விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இருந்து 650-ற்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.
இந்த பிரமாண்ட விழாவின் முக்கிய அம்சமாக விழாவின் நிறைவு நாள் அன்று தஞ்சை திருக்கனூர் பட்டியில் உள்ள ஏஞ்சல்ஸ் பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பாக நடனம் ஆடி அசத்தினர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. சகாயசெல்வி அவர்கள் மாணவர்களை சிறப்பான முறையில் தயார் செய்து இருந்தார்.
விழாவின் நடுவர் குழு தலைவரும், மன்றத்தின் துணை தலைவருமான செம்மொழி கவி. ந. அற்புத இலக்கியா மற்றும் தஞ்சை நெஞ்சன் தா. அகத்தியன் அவர்களும் விழா ஏற்பாட்டினை செவ்வனே செய்திருந்தார்கள்.
மாணவர்களின் நடன நிகழ்ச்சி விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்று சிறப்பு செய்தது என்று மன்றத்தின் நிறுவனர்
திருமா. வீ. முத்து அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் முதன்மை செய்தியாளர் தஞ்சாவூர்.