Mon. Aug 25th, 2025

திருப்பூர் ஆக 01.

*முரட்டுபாளையம் பாறைகுழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.*

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திலுள்ள முரட்டுபாளையம் பகுதியில் பாறைகுழியில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் லாரிகள் மூலமாக கொண்டு வந்து கொட்ட முயற்சி செய்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, நோய்த் தொற்று அபாயம் ஏற்படும். மேலும் நிலத்தடி நீர் மாசுபடும் எனக் குறி பாறைக்குழியில் குப்பை கொட்டும் முடிவை கைவிட வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர் மதிப்புக்குரிய மருத்துவர். நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் ஐ ஏ எஸ் அவர்களை ஊத்துக்குளி தாலுகா சி பி ஐ நிர்வாகிகள் இசாக்,  ஈஸ்வரன், நதியா, அண்ணாதுரை,  கணேசன், விவசாய தொழிலாளர் சங்க பழனிச்சாமி, ஞானசேகர், ரமேஷ், திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க ஈ.பி.அ.சரவணன் மற்றும் ஊர் பொது மக்கள் நேரிடையாக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மீண்டும் மீண்டும் பாறைக்குழிகளை தேடிப்பிடித்து குப்பைக் கழிவுகளை கொட்டுவது, சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும்.

இங்குள்ள பாறைக்குழியில் குப்பைக் கொட்டுவதால், கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளை தேடிப்பிடித்து, விஷத்தன்மை நிறைந்த கழிவு முதற்கொண்டு, அனைத்து கழிவுகளும் கொட்டப்படுவதால், பெரும் சுகதார கேடு ஏற்படும் வாய்ப்புண்டு எனவே உடனடியாக இது தொட‌ர்பாக உரிய தீர்வுகாண வேண்டுமென அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினர்.

சரவணக்குமார்.

By TN NEWS