தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் சம்பங்குளம் மலைப்பகுதியில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சடைமலை கோதரிபாவா கௌதலி நாயகம் தர்கா ( வக்ஃபு GS.No 63/TNV ) உள்ளது.
இந்த தர்காவில் தொடர்ந்து வழிபாடுகளும், வருடத்திற்கு ஒரு முறை கந்தூரி விழாவும் அரசு அனுமதியுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய்களை பரப்புவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை கெடுப்பதையே தங்களின் தீர்மானமாக கொண்டுள்ள இந்துமுன்னணி சார்பில் மாநில இணை அமைப்பாளர் பொன்னையா தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அம்மனுவில் ” சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், ஒற்றுமையோடு வாழ்ந்து வரும் மக்களுக்கு மத்தியில் மத பதட்டத்தை உருவாக்கும் வகையில் , அத்திரி மலையை சடைமலை என பெயர் மாற்றம் செய்து இஸ்லாமியர்கள் மோசடி செய்வதாகவும் , இஸ்லாத்தின் பெயரால் நடைபெறும் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி கோதரிபாவா கௌதலி நாயகம் தர்காவை இடிக்க வேண்டும் எனவும் வன்முறையை தூண்டும் வகையில் பொய்யான தகவல்களை அளித்துள்ளனர்.
இது சம்மந்தமாக #SDPI கட்சியின் சார்பில் உடனடியாக காவல் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதோடு, தர்கா நிர்வாகத்தையும் நேரில் சந்தித்து தர்கா சம்மந்தமான தகவல்களை கேட்டறிந்தோம். உடனடியாக காவல் உயர் அதிகாரிகள் ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் வைத்து ஆலங்குளம் காவல்துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் தர்கா நிர்வாகிகள் மற்றும் SDPI கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்.
கூட்டத்தில் பழைமை வாய்ந்த தர்கா மீது பொய்யான தகவல்களை பரப்பி, சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டதோடு , எதிர்வருகின்ற 09.08.2025 ,சனிக்கிழமை நடைபெறும் 546 வது வருட கந்தூரி விழாவிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கி கந்தூரி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
தகவல்களை கேட்டுக்கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியளித்ததோடு உடனடியாக மலை பகுதிக்கு சென்று தர்காவை பார்வையிட்டு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய காவல் ஆய்வாளர் அவர்களிடம் உத்தரவிட்டார். நிகழ்வில் SDPI கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் முகம்மது நைனார், மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுமஹ்மூத், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஷேக்முகம்மது ஒலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஸ்கர் அலி, ஆலங்குளம் தொகுதி தலைவர் விஸ்வா ஹாஜா, தொகுதி செயலாளர் அப்துல் அஜீஸ், தொகுதி பொருளாளர் செய்யது பாசில், முதலியார்பட்டி நகர தலைவர் ஜவகர் அலி, நகர செயலாளர் முகம்மது நதீம் , தர்கா நிர்வாகிகள் ராஜா முகம்மது ஷேக்முகம்மது, முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜோ.அமல்ராஜ் – தலைமை செய்தியாளர்
தென்காசி மாவட்டம்.