சென்னை அம்பத்தூரில் தூய்மை பணியாளர்கள் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு ஒருமைப்பாடு தெரிவித்து AICCTU தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசே !
சென்னை மாநகராட்சி நிர்வாகமே ! !
¶ தூய்மைப் பணிகளை
அவுட்சோர்சிங் விட்டதை வாபஸ் பெற்றிடு !
¶ தூய்மைப் பணியாளர்களை
பணி நிரந்தரம் செய்திடு !
செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு,
தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர்கள் காவலர்கள் சங்கம் சார்பில்
சென்னை அம்பத்தூரில் தூய்மை பணியாளர்கள் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவாக ஒருமைப்பாடு தெரிவித்து செங்கோட்டை
நகராட்சி தூய்மை பணியாளர் சங்க செயலாளர் S தமிழரசி தலைமையில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
முன்னிலை தோழர்கள்; பகவதிராஜ், முருகேஸ்வரி,சக்திவேல்
குட்டி, குத்தாலிங்கம், செங்கோட்டை நகராட்சி தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள்,
தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர்கள் காவலர்கள் சங்கம், AICCTU மாவட்டத் தலைவர்
M வேல்முருகன்.
மாவட்ட பொது செயலாளர்
J சுப்பிரமணியன்
சென்னை அம்பத்தூரில் ,
பெண் தூய்மை பணியாளர்கள் நடத்திவரும்
காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திற்கும், கோரிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்து பேசினார்கள்
தொடர்ந்து ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டன
ஜோ.அமல்ராஜ் – தலைமை செய்தியாளர் – தென்காசி மாவட்டம்.