தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா முதியோர் இல்லங்களில் மருத்துவ வசதிகள், சேவைகள் ஆய்வு.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆர்பனேஜ் சொசைட்டி கடுவெளி முதியோர் இல்லம், தஞ்சாவூர் கல்லுக்குளம் பூக்கார தெரு ஓசானனம் முதியோர் இல்லம், தளவாய் பாளையம் டி.எஸ். நகரில் உள்ள காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு முதியோர் இல்லம் மற்றும் சேவாலயா ஆகிய இடங்களில் தங்கியுள்ள முதியோர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதியோர் நலனுக்கான சேவைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ்,
முதன்மை செய்தியாளர் தஞ்சாவூர்