சாம்பவர்வடகரை பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார் தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன்
சாம்பவர்வடகரை:
சாம்பவர்வடகரை பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 7 வார்டுகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் சாம்பவர்வடகரை தில்லைவனத்தான்கரை ஸ்ரீ அம்பிகை சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலெட்சுமி முத்து தலைமையேற்றார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நாலாயிரம் பாப்பா, பேரூர் திமுக செயலாளர் முத்து (எ) செல்லக்கனி முன்னிலையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமைத் துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
செயல் அலுவலர் விமலா ஸ்டல்லா பாய், பேரூராட்சி கவுன்சிலர்கள் சுடலைமுத்து, பழனிகுமார், ரஃபிக் ராஜா, மெர்சி சுந்தர், விஜயலட்சுமி, ஐயப்பன், இசக்கி, தேவி உள்ளிட்டோர், துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முகாமில் 1 முதல் 7 வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பலனடைந்தனர்.
ஜோ.அமல்ராஜ் – தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்