Sat. Aug 16th, 2025

பேரணாம்பட்டு அருகே டிடி மோட்டூர் கிராமத்தில் 32 அடி உயர ஸ்ரீ மகா காளிகாம்பாள் தேவஸ்தானத்தில் மண்டல பூஜை.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம், டிடி மோட்டூர் மதுரா பெரிய பள்ளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள 32 அடி உயரமுள்ள ஸ்ரீ மகா காளிகாம்பாள் சிலைக்கு கடந்த 8.6.2025 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்றிலிருந்து தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, 26.7.2025 இரவு 48-ஆம் நாள் மண்டல பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு நிகழ்வுகள்:

கணபதி பூஜை, வாஸ்து பூஜை, மேளதாள வாத்தியக் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது.

பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, பக்தி பூர்வமாக வழிபாடு செய்தனர்.

விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி டி. சிவா சாமியார் சிறப்பாக செய்திருந்தார்.

– கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்

 

By TN NEWS