1. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபர்கள் கைது.
I. திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 27.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த எம்டி இன்ஷாத்(34) என்ற நபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 1.400 கி.கிராம் மற்றும் கஞ்சா சாக்லேட் 600 கிராம் கைப்பற்றப்பட்டு, பின்னர் மேற்கண்ட நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
II. திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 27.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சேக்கியாசுதீன்(46) என்ற நபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 750 கிராம் கைப்பற்றப்பட்டு, பின்னர் மேற்கண்ட நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
III. திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாஸ்கோ நகர் அருகே 27.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ராஜ்குமார்(24) என்ற நபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 500 கிராம் கைப்பற்றப்பட்டு, பின்னர் மேற்கண்ட நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2. வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்திய நபர்கள் கைது.
I. திருப்பூர் மாநகரம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்திராபுரம் பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதியில் இன்று 27.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது சாத்ராக்(22) என்ற நபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 100 (Tapentadol) வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் மேற்கண்ட நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
II. திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதியில் இன்று 27.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது அசோக்குமார்(23) என்ற நபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 48 (Tapentadol) வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் மேற்கண்ட நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
3. சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர்கள் கைது.
I. திருப்பூர் மாநகரம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே 27.07.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் நல்லூர் காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது முருகன்(55) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த 180 ML அளவுள்ள 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
II. திருப்பூர் மாநகரம், மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட KVR நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே 27.07.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் மத்திய காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது சின்னஅம்பலம் (34) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த 180 ML அளவுள்ள 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
III. திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே 27.07.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது சரவணன்(43) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த 180 ML அளவுள்ள 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
IV. திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே 27.07.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது தமிழரசன்(35) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த 180 ML அளவுள்ள 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த நபர் கைது.
திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கள்ளம்பாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் வடக்கு காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது சர்தார்(55) என்கின்ற நபர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்கண்ட எதிரி மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சரவணக்குமார்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.