ஜூலை 26 – வேலூர் மாவட்டம்
ஒருங்கிணைந்த வட ஆற்காடு முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப்பின் சார்பில், இந்திய இராணுவத்தின் 26ஆம் ஆண்டு கார்கில் விஜய் திவாஸ் வெற்றி விழா மற்றும் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த 527 இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும், குடியாத்தம் முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் வீர மங்கையர்கள் நலச் சங்கத்தின் தலைவர் திரு. D. ஜெயக்குமார், பொருளாளர் திரு. M. குணசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்
